news

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Wednesday, October 10, 2018

பனை பாடும் பாடல் - தினமலர் மதிப்புரை

பனை



வெப்ப மண்டலங்களின் வறட்சியைத் தாங்கி, இயற்கையில் தானாகவே விதை போட்டு, நீரூற்றி வளர்க்காமல் இயற்கையாக வளர்ந்து அதிக பயன் தருவது பனை மரம்.
மண்ணுலகக் கற்பக தருஎன்று பனை மரத்தைப் போற்றுவர். அதன் பெருமைகள், பயன்கள், பாடல்கள் ஆகியவற்றை, இந்நுால் பனை நுங்கு போல சுவையுடன் வாசகருக்கு தருகிறது.
படிக்க முடியாதவர் பார்த்துப் பயன் பெற, பனை மரத்தின் பல்வேறு சிறப்புகளை பச்சைப் பசேல் என்ற வண்ணப் படத்துடன் தந்துள்ளமை கண்ணைக் கவர்கிறது. பனை நுங்கை யானையின் கால் நகங்களுக்கு, அகநானுாறு உவமை காட்டுவதை படத்துடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளது பாராட்டத்தக்கது.
பனை வெல்லம், கருப்பட்டியின் மருத்துவக் குணங்கள் பலவாறாகத் தரப்பட்டுள்ளன.
திருஞானசம்பந்தர் திருவோத்துாரில் ஆண் பனையை பெண் பனையாக்கிய அற்புதமும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பனை மரம் பாடும் பாட்டுஅதன் பயன்களுக்கு எடுத்துக்காட்டு.
எழுச்சூர், திருப்பனையூர், திருமழபாடி, பேரூர் போன்ற, 15 கோவில்களில், பனை மரமே தல மரமாக உள்ளது.
கொளுத்தும் கோடை வெயிலில் சுவைக்கும் பனை நுங்கும், தமிழைத் தாங்கிய ஓலைச் சுவடிகளும், காற்றாடியும் மட்டுமா... பனையின் பயன்கள் இத்தனையா என்று ஆச்சரியப்பட வைக்கும் அத்தனை பனை மரச் செய்திகளும் உள்ள கற்பனை இல்லா நற்பனை நுால்.
முனைவர் மா.கி.ரமணன்
             
                                                 தினமலர்சென்னை பதிப்பு   தேதி: 07-10-2018