news

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Wednesday, October 10, 2018

பனை பாடும் பாடல் - தினமலர் மதிப்புரை

பனை



வெப்ப மண்டலங்களின் வறட்சியைத் தாங்கி, இயற்கையில் தானாகவே விதை போட்டு, நீரூற்றி வளர்க்காமல் இயற்கையாக வளர்ந்து அதிக பயன் தருவது பனை மரம்.
மண்ணுலகக் கற்பக தருஎன்று பனை மரத்தைப் போற்றுவர். அதன் பெருமைகள், பயன்கள், பாடல்கள் ஆகியவற்றை, இந்நுால் பனை நுங்கு போல சுவையுடன் வாசகருக்கு தருகிறது.
படிக்க முடியாதவர் பார்த்துப் பயன் பெற, பனை மரத்தின் பல்வேறு சிறப்புகளை பச்சைப் பசேல் என்ற வண்ணப் படத்துடன் தந்துள்ளமை கண்ணைக் கவர்கிறது. பனை நுங்கை யானையின் கால் நகங்களுக்கு, அகநானுாறு உவமை காட்டுவதை படத்துடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளது பாராட்டத்தக்கது.
பனை வெல்லம், கருப்பட்டியின் மருத்துவக் குணங்கள் பலவாறாகத் தரப்பட்டுள்ளன.
திருஞானசம்பந்தர் திருவோத்துாரில் ஆண் பனையை பெண் பனையாக்கிய அற்புதமும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பனை மரம் பாடும் பாட்டுஅதன் பயன்களுக்கு எடுத்துக்காட்டு.
எழுச்சூர், திருப்பனையூர், திருமழபாடி, பேரூர் போன்ற, 15 கோவில்களில், பனை மரமே தல மரமாக உள்ளது.
கொளுத்தும் கோடை வெயிலில் சுவைக்கும் பனை நுங்கும், தமிழைத் தாங்கிய ஓலைச் சுவடிகளும், காற்றாடியும் மட்டுமா... பனையின் பயன்கள் இத்தனையா என்று ஆச்சரியப்பட வைக்கும் அத்தனை பனை மரச் செய்திகளும் உள்ள கற்பனை இல்லா நற்பனை நுால்.
முனைவர் மா.கி.ரமணன்
             
                                                 தினமலர்சென்னை பதிப்பு   தேதி: 07-10-2018

Friday, May 11, 2018

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா

திருக்குறள்

திருக்குறள்



09-05-2018 அன்று புதன் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை, 
மெரினா வளாகம் பவளவிழாக் கலையரங்கத்தில் 
இரா. பஞ்சவர்ணம் எழுதிய 
திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 
வெளியிட்டு விழாவில் சென்னை வருமான வரித்துறை துணை ஆணையர் 
எஸ்.பி. சக்ரப்போர்த்தி IRS, 
நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம்
முன்னால் அரசு செயலாளர் கி. தனவேல் IAS பணி ஓய்வு, 
தமிழ் வளர்ச்சித் துறை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் 
மாஃபா. க. பாண்டியராசன், 
சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர் 
இராம சீனுவாசன், 
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலக தமிழ் வளர்ச்சி நிறுவன இயக்குநர்   
முனைவர்.கோ. விசயராகவன், 
திருக்குறள் ஆய்வு மைய உதவி பேராசிரியர் முனைவர் 
வ. இரகுராமன், 
சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர்
ஒப்பிலா மதிவாணன்.




thirukkral

thirukkral

Friday, January 19, 2018

இரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் நூல் வெளியீடு

பனை

பஞ்சவர்ணம்
17-01-2018 கோவை பேரூர் ஆதினம்
கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற
பனை உலகப் பொருளாதார மாநாட்டில்
இரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் என்ற நூல் வெளியீடு
வனம் இந்திய அறக்கட்டளை பொருளாளர் - பி.எம்.ஆர். சுந்தரமூர்த்தி அவர்கள்
சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர்
கார்த்திகேயன் சிவசேனாதிபதி அவர்கள்
தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்
தவத்திரு சாந்தலிங்க அடிகளார், கலை அறிவியல் தமிழ்கல்லூரி முதல்வர்
முனைவர் மருதாசல அடிகளார் அவர்கள்
சுதேசிய இயக்க தலைவர் அறிவுடை நம்பி அவர்கள்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கப் பேரவை செயலாளர்
என்..கோன் அவர்கள், இவர்களுடன் நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம்

Thursday, January 11, 2018

பனை பாடும் பாடல் நூல்வெளியீடு




எனது நூல் "பனை பாடும் பாடல்" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் ப்படவுள்ளது